சுற்றுலா பயணியான மியன்மார் நாட்டு பெண் மீது துஷ்பிரயோகம்..! ஹோட்டல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது, உணவில் போதை கலந்து கொடுத்ததாக புகார்...
இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த மியன்மார் நாட்டு பெண் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் இரு பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் பெந்தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் 30ம் திகதி பெந்தோட்ட பகுதிக்கு தனது நண்பியுடன் சென்றிருந்த மியன்மார் நாட்டு பெண் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் உணவு வாங்கியுள்ளனர்.
பின்னர் தாம் சுய நினைவை இழந்த நிலையில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக 26 வயதான மியன்மார் நாட்டு பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன்,
ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் போதைப் பொருள் கலந்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் ஹோட்டல் உரிமையாளர்
மற்றும் ஊழியர்கள் இருவரை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார். பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ள பெண்ணிடம்,
வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.