புதிய பிரதமர் பதவியேற்பின் பின் 1வது நாடாளுமன்ற அமர்வு..! பிரதி சபாநாயகர் தொிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு...

ஆசிரியர் - Editor I
புதிய பிரதமர் பதவியேற்பின் பின் 1வது நாடாளுமன்ற அமர்வு..! பிரதி சபாநாயகர் தொிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு...

புதிய பிரதமர் ரணில் விக்கிரம சிங்க பதவியேற்றதன் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. 

இதன்போது பிரதி சபாநாயகர் தொிவுக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றுகிறது. பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, 

அதே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை ஆதரித்தார்.

இதேவேளை, அஜித் ராஜபக்சவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்ததுடன், பண்டார யோசனையை ஆதரித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு