நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4பேர் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி அடங்கலாக 22 பேரை கைது செய்ய உத்தரவு..! தீவிரமடையும் கைது வேட்டை..
கொழும்பில் கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்செயல்கள் தொடர்பாக 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி அடங்கலாக சுமார் 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜயதிலக்க மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த 22 சந்தேக நபர்கள் தொடர்பில் நேரடி, சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப சாட்சியங்கள் இருப்பின் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
சந்தேகநபர்கள் அவர்களின் முகவரிகளில் இல்லாவிடில், சாட்சியங்களை முன்வைத்து அவர்களைக் கைது செய்வதற்கு நீதவான் ஒருவரிடமிருந்து திறந்த பிடியாணையைப் பெற வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லது உரிய முகவரிகளில் காணப்படாத சந்தேக நபர்களைக் கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்கள்..
01. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
02. சனத் நிஷாந்த
03. சஞ்சீவ எதிரிமான்ன
04. மிலான் ஜயதிலக்க
05. தேசபந்து தென்னகோன், (மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்)
06. டான் பிரியசாத்
07. மஹிந்த கஹந்தகம
08. நாலக விஜேசிங்க
09. பந்துல ஜெயமான்ன
10. தினேத் கீதக
11. சமன்லால் பெர்னாண்டோ
12. அராபி வசந்த
13. சுபாஷ் (தெஹிவளை நகர சபை)
14. அமல் சில்வா
15. சமீர சதுரங்க ஆரியரத்ன
16. ருவன்வெல்லே ரமணி
17. துசித ரணபாகு
18. சஜித் சாரங்க
19. புஷ்பலால் குமாரசிங்க
20. நிஷாந்த மெண்டிஸ்
21. புஷ்பகுமார (முன்னாள் இராணுவ சிப்பாய்)
22. சவின் பெர்னாண்டோ (வென்னப்புவ)
ஏற்கனவே பயணத்தடை பெற்றவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.