இலங்கை மதிப்பில் சுமார் 18.69 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் மேலும் ஒருவர் கைது..!
சுமார் 50 ஆயிரம் யூரோவுடன் 53 வயதான நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
பொரலஸ்கமுவ - பெப்பிலியான பகுதியில் குறித்த நபர் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, உண்டியல் முறையில் பரிமாற்றுவதற்கென வைத்திருந்த 50,000 யூரோ பணமும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட யூரோக்களின் இலங்கை பெறுமதியானது, 18.69 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைதானவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றய தினமும் பெருமளவு டொலருடன் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.