அடித்துக் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பாதுகாவலர்..! 4 பேர் இதுவரை கைது, மேலும் தேடுதல் தொடர்கிறதாம்..
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கொரல மற்றும் அவருடைய பாதுகாவலர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவ பிரதேசத்தில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரும் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களில் இருவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மற்றைய இரு சந்தேகநபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.