நுாற்றுக்கணக்கானோரின் புகைப்படங்களை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்..! தீவிர தேடுதல் தொடர்கிறது..
அலரிமாளிகை முன்பாக மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காணப்பதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியிருக்கின்றனர்.
கடந்த 9ம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள்
071 859 4901 - 071 859 4915 - 071 859 2087 - 071 859 4942 - 071 232 0145 - 011 242 2176