பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்! வன்முறையாளர்கள், கொள்ளையர்கள் இலக்குவைக்கப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I
பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்! வன்முறையாளர்கள், கொள்ளையர்கள் இலக்குவைக்கப்பட்டனர்..

நாட்டின் பல பகுதிகளில் கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்செயல்களின்போது வீடுகள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தியோர், வீடுகள், வணிக நிலையங்களை கொள்ளையடித்தோர், பொருட்களை திருடியோர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியிருக்கின்றனர். 

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். தகவல்களை பெற்றுக் கொடுப்பதற்காக 1997 மற்றும் 119 என்ற இரண்டு தொலைபேசி இலக்கங்களை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு தகவல் அளிப்பவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio