தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி மீண்டும் பீதியை கிளப்ப முயல்வது யார்? கோட்டாவா? ரணிலா? இரா.சாணக்கியன் கேள்வி...

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி மீண்டும் பீதியை கிளப்ப முயல்வது யார்? கோட்டாவா? ரணிலா? இரா.சாணக்கியன் கேள்வி...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதற்காவே விடுதலை புலிகள் மீள இலங்கையில் தாக்குதலுக்கு திட்டமிடுகிறார்கள் என்ற செய்தி உருவாக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், 

வடக்கு- கிழக்கில் உள்ளவர்கள் இந்த வாரம் முள்ளிவாய்க்காலில் இழந்த அன்புக்குரியவர்களை நினைவு கூர்கின்றனர். இறந்தவர்களை நினைவுகூருவதைத் தடுக்க சரியான நேரத்தில் இது விதைக்கப்பட்டதா? 

இது ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்தா? கோத்தாபய ராஜபக்சவிடமிருந்தா?சவேந்திர சில்வாவிடமிருந்தா? கமல் குணரட்ணவிடமிருந்தா? வந்தது, என்று நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், பிமல் ரத்நாயக்க போன்றோரும் இந்த செய்தி தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio