நாட்டு மக்களிடம் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை..!
நாட்டில் சட்டவிரோத மற்றும் வன்முறை குழுக்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இதற்காக பாதுகாப்பு அமைச்சு இரு தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளதுடன், இந்த இலக்கங்கள் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் வழங்கலாம் எனவும் அறிவித்திருக்கின்றது.
தொலைபேசி இலக்கங்கள்:-0767 393977/ 0112 441146/ 118