எந்தவொரு விசாரணைக்கும் முகம் கொடுக்க தயார்..! நாட்டிலிருந்து வெளியேறும் எண்ணம் கிடையாது. நாமல் கூறுகிறார்..
எனக்கோ அல்லது என் தந்தைக்கோ நாட்டிலிருந்து வெளியேறும் எண்ணம் எதுவுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கூறியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும்
தனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.