ஜனாதிபதிக்கு எதிரான போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் எந்த முடிவுமில்லை! அவர்கள் அமைதியாக இருக்கும்வரை பிரச்சினை இல்லை..
ஜனாதிபதிக்கு எதிராக காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துவோரை விரட்டியடிக்கும் எந்த முடிவும் இருவரை எடுக்கப்படவில்லை. என கூறியிருக்கம் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, போராட்டக்காரர்கள் அமைதியாக இருக்கும்வரை பிரச்சினை இல்லை. எனவும் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார்.