SuperTopAds

நாடாளுமன்றில் பெரும்பான்மை நம்பிக்கையை பெறும் பிரதமர் - அமைச்சரவை இவ்வாரம் நியமிக்கப்படும்..! ஐனாதிபதி உரையில்...

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றில் பெரும்பான்மை நம்பிக்கையை பெறும் பிரதமர் - அமைச்சரவை இவ்வாரம் நியமிக்கப்படும்..! ஐனாதிபதி உரையில்...

நிறைவேற்று அதிகார ஐனாதிபதி முறைமையை ஒழிக்க பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையில் நாட்டு நிலையை ஸ்திரப்படுத்திய பின் புதிய அரசுடன் அனைவரும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ள ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ,

இவ்வாரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினருடைய நம்பிக்கையை பெறும் வகையில் பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

புதிய இடைக்கால அரசை நியமிப்பதற்கு வசதியாக கடந்த சில நாள்களில் பல தீர்மானங்களை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

19வது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கோத்தாபய ராஜபக்ஸ கூறினார்.