வன்முறைகளை தடுக்க துப்பாக்கி சூடு..! பொலிஸாருக்கும் அனுமதி வழங்கப்பட்டது..
நாடு முழுவதும் வன்செயல்களை தடுப்பதற்கு பொலிஸாருக்கு துப்பாக்கி சூடு நடத்துவதற்கான உத்தரவை பொலிஸ் திணைக்களம் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின்போது வீடுகள் மற்றும் வாகனங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண பொதுமக்களின் ஆதரவையும் கோரியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) விசுவாசிகள் கொழும்பில் அமைதியான முறையில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியோர் மீது தாக்குதல் நடத்தியமையினால் பொதுமக்கள் கோபத்தில் பதிலடி கொடுத்ததில் இருந்து பல வன்முறை சம்பவங்கள் மற்றும் பதட்டமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளன.
அமைதியின்மை வெடித்ததில் இருந்து பொதுஜன பெரமுன SLPP அரசியல்வாதிகளின் வீடுகள், வாகனங்கள் மற்றும் பல்வேறு சொத்துக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் அழிக்கப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொது மக்களை தாக்கி சொத்துக்களை சூறையாடுவதை தடுக்கும் வகையில் ராணுவத்திற்கு ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சகத்தால் துப்பாக்கி சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைப் பின்பற்றிய இலங்கை காவல்துறை, நாட்டில் மேலும் வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க துப்பாக்கிச் சூடு உத்தரவும் பிறப்பித்துள்ளது.