வன்செயலில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 173 ஆக உயர்வு, துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி...!
மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான காடையர்களால் தொடங்கப்பட்ட வன்செயலை தொடர்ந்து இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 173ஆக உயர்ந்திருக்கின்றது.
இரு தரப்பு மோதலால் 6 பெண்கள் உள்ளிட்ட 173 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான 3 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.