அலரி மாளிகை சூழலில் நள்ளிரவு தாண்டியும் பதற்றம், பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு...!
அலரி மாளிகை சுற்றாடலில் நள்ளிரவை தாண்டியும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்ப்பதாக கூறப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால், அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறிவருகிறது.
இந்நிலையில் அலரி மாளிகை சுற்றாடலிலும் போராட்டக்காரர்கள் நள்ளிரவு தாண்டியும் நின்று அலரி மாளிகை மீதான தாக்குதல் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசுவதுடன், வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்துவருகின்றனர்.