இன்றும், நாளையும் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு, அட்டவணையும் வெளியானது..

ஆசிரியர் - Editor I
இன்றும், நாளையும் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு, அட்டவணையும் வெளியானது..

நாடு முழுவதும் இன்றும், நாளையும் மின்வெட்டு அமுலில் இருக்கும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதன்படி இரு நாட்களும் வழக்கம்போல் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், 

 மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். 

அத்தோடு CC வலயத்திற்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதோடு M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்கு 

 காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு