நாடு பற்றி எரிகிறது..! நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள் தீக்கிரை, ஆதரவாளர்கள் மீது தொடரும் சரமாரி தாக்குதல்...
நாடுமுழுவதும் அரசுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை தலைவர்களுடைய வீடுகள் அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்திவரும் பொதுமக்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக முன்னாள் அமைச்சர்ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மேலும் சனத் நிஷாந்த, பிரசன்ன ரணதுங்கு உள்ளிட்ட பலருடைய வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசுக்கு ஆதரவானவர்கள் மீதும் தாக்குதல் சம்மவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளது.