கலவர பூமியாக மாறியது காலிமுகத்திடல்..! பிரதமரின் ஆதரவு காடையர்கள் தாக்குதல், பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும், நீர்தரை பிரயோகம்...
பிரதமர் மஹிந்தவின் ஆதரவு காடையர்கள் காலி முகத்திடலில் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில் இரு தரப்புக்குமிடையிலான மோதல் மற்றும் பொலிஸாரின் கலகம் தடுக்கும் முயற்சியினால் காலிமுகத்திடல் கலவர பூமியாக மாறியுள்ளது.
அமைதியான முறையில் காலிமுகத்திடலில் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இ ந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கலைக்க
கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பு செய்திகள் தொிவிக்கின்றன. தற்போது காலிமுகத்திடல் பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.