மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார், ஆனால் 69 லட்சம் மக்களின் ஆணையை மீறப்போவதில்லை..!
சவால்களை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓட முடியாது. என கூறியிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 69 லட்சம் மக்களுடைய ஆணையை மீறமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
அலரி மாளிகை முன்பாக தனது ஆதரவாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
சவால்களை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓட முடியாது. அரசியல் காரணங்களுக்காக ஒரு சிலர் மேற்கொள்ளும் திட்டங்களுக்கமைய செயற்பட்டு அரசியலமைப்பை மீறமுடியாது.
சர்வகட்சி அரசாங்க ஏற்பாடொன்றை ஜனாதிபதி செய்யலாம். அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க நான் தயார்.
மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார். ஆனால் 69 இலட்ச மக்களின் ஆணையை மீறும் எந்த செயலுக்கும் எங்களால் உடன்படமுடியாது.
எனவும் கூறியுள்ளார்.