SuperTopAds

வரிசையில் காத்திருக்கவேண்டாம்..! நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
வரிசையில் காத்திருக்கவேண்டாம்..! நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு..

நாட்டில் சமையல் எரிவாயு பெறுவதற்காக பல இடங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில் அவ்வாறு காத்திருக்கவேண்டாம். என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

எரிவாயு கையிருப்பு கிடைக்கும் வரை நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், தற்போது தொழிற்சாலைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படுகிறது என அவர் கூறினார்.

இதேவேளை, எரிவாயு இறக்குமதிக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாகவும்,

லிட்ரோ தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.