முக்கிய அமைச்சர் ஒருவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்க மறுத்த விசேட வைத்திய நிபுணர்..!
தற்போதைய அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவதற்கு பிரபல வைத்திய நிபுணரும், கொழும்பு பல்கலைகழக மருத்துவபீட பேராசிரியருமான ரணில் ஜயவர்த்தன மறுப்பு தொிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தொியவருவதாவது,
கொழும்பின் பிரபல தனியார் மருத்துவ மனையொன்றில், குறித்த வைத்திய நிபுணரிடம் ஊட்டச் சத்து தொடர்பிலான விடயம் ஒன்றுக்காகான சிகிச்சைகளுக்காக குறித்த அமைச்சர் சென்றுள்ளார்.
தைரோய்ட் நிலைமை காரணமாக இந்த அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளத்காக கூறப்படும் நிலையிலேயே, முன் கூட்டி செய்த பதிவுக்கு அமைய அவர் அவ்வைத்தியசாலைக்கு நேற்று (7) மதியம் சென்றுள்ளார்.
இதன்போது, அமைச்சர் தனக்கு ஒதுக்கப்பட்ட இலக்கம் நெருங்கியதும், அமைச்சரிடம் சென்றுள்ள தாதி ஒருவர், வைத்தியர் தனிப்பட்ட ரீதியில் அரசியல்வாதிகளுக்கு வைத்திய ஆலோசனை வழங்குவதிலிருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பின்னர் வைத்தியரை சந்திக்கும் தனது நேரத்தில் வைத்தியரிடம் குறித்த அமைச்சர் சென்றுள்ள நிலையில், தான் அரசியல்வாதிகளுக்கு சிகிச்சையளிப்பதை தனிப்பட்ட ரீதியில் நிறுத்தியுள்ளதாக
வைத்தியர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.