அனைத்துப் பல்கலைகழக மாணவர்களது போராட்டம் சடுதியாக நிறுத்தம்..! அரசுக்கு காலக்கெடு வழங்கியதாக தகவல்..
நாடாளுமன்ற நுழைவு வீதியை முற்றுகையிட்டு அனைத்துப் பல்கலைகழக மாணவர் சம்மேளனம் நடத்திய ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு முடிவெடுப்பதற்கு கால அவகாசம் வழங்கி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்குள் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும்
என பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.