பதற்றமான சூழலில் 17ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்..! எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் அறைக்குள் புகுந்தனர்..
நாடாளுமன்றத்திற்கு வெளியே பல்கலைகழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து எதிர்கட்சியினரின் எதிர்ப்பு நடவடிக்கையினால் நாடாளுமன்ற அமர்வுகள் 17ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விடுத்திருக்கின்றார். அதற்கமைய, 16ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பல்கலைகழக மாணவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு அளிக்க சபாநாயகரின் அறைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் சென்றிருக்கின்றனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் இதன்போது வலியுறுத்தினர்.