நாளை முடங்கப்போகும் நாடு..! ஹர்த்தாலுக்கு அதிகரிக்கும் ஆதரவு அலை...
அரசுக்கு எதிராக நாளை நாடு தழுவிய பாரிய ஹர்த்தால் நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் முஸ்தீபு காட்டியிருக்கின்றன.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகாத நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாளைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால், மற்றும் போராட்டங்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில்
அன்றைய தினம் அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கறுப்புக்கொடிகளை ஏற்றுமாறும் ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே இன்று நள்ளிரவு முதல் 24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு,
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.