ஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்?
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் காமராஜர் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக தயாராகி வெளிவந்தது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்க்கையும் இப்போது படமாகி வருகிறது. அடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான திரைக்கதை நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேசை அணுகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மறைந்த நடிகை சாவித்திரி வேடத்தில் அவர் நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ படம் திரைக்கு வந்துள்ளது.
இதில் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்து இருப்பதாகவும் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக அவர் பொருந்தி இருப்பதாகவும் பாராட்டுகள் குவிகின்றன. இதனால்தான் அவரை ஜெயலலிதா வேடத்துக்கு பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல தலைவர்கள் வாழ்க்கையும் படமாகி வருகிறது. ஆந்திராவில் மறைந்த முதல்வர்கள் என்.டி.ராமராவ்இ ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருவரது வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது.
என்.டி.ராமராவாக அவரது மகன் பாலகிருஷ்ணாவே நடிக்கிறார். ராஜசேகர ரெட்டியாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் அவரது மனைவியாக நயன்தாராவும் நடிக்க உள்ளனர். மறைந்த பிரதமர் இந்திரா காந்திஇ மன்மோகன் சிங் வாழ்க்கையும் படங்களாகின்றன. இந்திரா காந்தி வேடத்தில் வித்யா பாலனை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது.