SuperTopAds

மிக தவறான நடவடிக்கை..! அமொிக்க துாதுவர் கண்டனம்..

ஆசிரியர் - Editor I
மிக தவறான நடவடிக்கை..! அமொிக்க துாதுவர் கண்டனம்..

நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதற்காக இடம்பெற்ற கைது சம்பவத்தை இலங்கைக்கான அமொிக்க துாதுவர் கண்டித்துள்ளார். 

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.கைதுக்கு அஞ்சாமல் போராட்டம் நடத்தும் சுதந்திரம் ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் எனவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வன்முறையை புறக்கணிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதுடன், அமைதியான போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.