பாடசாலைக்குள் நுழைந்து அதிபர் அறைக்கும், கணனி அறைக்கும் தீவைத்த மாணவர்கள்! வயது 12 மற்றும் 7, காரணம் இதுதானம்..
பாடசாலையில் அதிபர் அறை மற்றும் கணனி அறைக்கு தீவைத்த 12 வயது மற்றும் 7 வயது மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை வடக்கு கெசல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே நேற்றுமுன்தினம் (03) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
12 மற்றும் 07 வயதுடைய குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களே இரண்டு அறைகளுக்கும் தீ வைத்துள்ளதாக சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் செய்த சிறு தவறுக்காக அதிபரால் தண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் மாணவர்கள் இவ்வாறு செயற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாடசாலை சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.