SuperTopAds

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்..!

ஆசிரியர் - Editor I
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்..!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இநுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, வௌர்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விலை 220 ரூபாய், 

வௌர்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 230 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், கீரி சம்பா ஒரு கிலோ கிராமின் விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.