வீட்டு கழிவு நீர் விடுவதற்கான தொட்டியை துப்புரவு செய்தபோது நடந்த விபரீதம்..! இருவர் பலி, இருவர் ஆபத்தான நிலையில்...
வீட்டு கழிவு நீர் விடுவதற்கான தொட்டியை துப்புரவு செய்வதற்கு வந்திருந்த தொழிலாளியும், அவரை காப்பாற்றுவதற்கு சென்றிருந்த வீட்டின் உரிமையாளரும் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் மல்வான - யட்டியான பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. வீட்டு கழிவு நீரை விடுவதற்கான தொட்டியை துப்புரவு செய்வதற்கு 51 வயதான தொழிலாளி ஒருவர் வந்துள்ளார்.
அவர் தொட்டியில் இறங்கியவுடனேயே விஷவாயு தாக்கி தொட்டிக்குள்ளேயே மயங்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்காக வீட்டின் உரிமையாளர் முயற்சித்த நிலையில் அவரும் மயங்கி விழுந்துள்ளார்.
இவர்கள் இருவரையும் மீட்பதற்கு மேலும் இருவர் குழிக்குள் இறங்கிய நிலையில் மயக்கமடைந்த நிலையில் செயற்கை சுவாச கருவிகளுடன் குழிக்குள் இறங்கிய மேலும் ஒரு நபர் அவர்களை மீட்டு ராக வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில்,
முதலில் இறங்கிய தொழிலாளி மற்றும் வீட்டின் உரிமையாளர் உயிரிழந்ததுடன், மற்றய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.