SuperTopAds

பொலிஸ் துப்பாக்கி சூட்டில் 15 வயது சிறுவனும் காயமா? உண்மை மறைக்கப்பட்டதா? குற்றப் புலானாய்வு பிரிவிடம் அறிக்கை கோரியுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை...

ஆசிரியர் - Editor I
பொலிஸ் துப்பாக்கி சூட்டில் 15 வயது சிறுவனும் காயமா? உண்மை மறைக்கப்பட்டதா? குற்றப் புலானாய்வு பிரிவிடம் அறிக்கை கோரியுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை...

கேகாலை மாவட்டம் ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 15 வயதான சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கை கோருவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

ரம்புக்கனையில் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, 

பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.