மே-3ம் திகதி ராஜபக்ஸக்கள் மற்றும் அமைச்சர்களின் முக்கிய ஆவணங்கள் வெளியிடப்படும்..! அனுரகுமார திஸாநாயக்க அறிவிப்பு..
மே - 3ம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்.
ராஜபக்ஷ குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களை பொதுமக்களிடம் அவர் முன்வைக்கவுள்ளதாக அவர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே தனது ட்விட்டரில் நேற்றைய தினம் அவர் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் “உரிமையாளர்களும் கேட்டவர்களும் மே 3 ஆம் திகதி விழிப்புடன் இருக்கவும்” என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.