SuperTopAds

அரசுக்கு எதிரான போராட்டங்களால் நாடு இயல்புநிலையை இழந்தது..! நாட்டின் சகல பகுதிகளிலும் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்...

ஆசிரியர் - Editor I
அரசுக்கு எதிரான போராட்டங்களால் நாடு இயல்புநிலையை இழந்தது..! நாட்டின் சகல பகுதிகளிலும் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்...

நாடு முழுவதும் அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களினால் “பொதுப் பணிப்புறக்கணிப்பு போராட்டம்” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிப் புறக்கணிப்பு போராட்டத்தினால் நாடு முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது. 

மேலும் யாழ்ப்பாணம், வவுனியா, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, கொழும்பு, பதுளை உள்ளிட்ட நாட்டின் சகல பாகங்களிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் பாடசாலைகள் இயங்காததுடன், பொதுப் போக்குவரத்து சேவைகளும் முடங்கிய நிலையில் காணப்பட்டிருக்கின்றது.