பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி விலகியவுடன் இடைக்கால அரசு..! பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், ஜனாதிபதி கடிதம் மூலம் அழைப்பு...
பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆழும்கட்சியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களிடமும் கடிதம மூலம் தொிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறும் விசேட கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் ஜனாதிபதி மேற்படி கட்சி தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் கொள்ளை அடிப்படையில் இணங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியதை தொடர்ந்து சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும். அதனடிப்படையில் சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு தொடர்பில் ஆராய நாளை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு
2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை தொடர்ந்து அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தீவிரமடைந்துள்ள சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வ கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு மகாசங்கத்தினரும்,
கொழும்பு பேராயர் உட்பட சர்வ மத தலைவர்கள, அரசியல்வாதிகள், உட்பட நாட்டு மக்கள் வலியுறுத்தியதை கவனத்திற் கொண்டு இத்தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாளைமறுதினம் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் சர்வகட்சி அரசாங்கத்தின் கட்டமைப்பு,
இடைக்கால அரசாங்கத்தின் பதவி காலம் மற்றும் இடைக்கால அரசாங்கத்தில் நியமிக்கப்படவுள்ள பிரதிநிதிகள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.