வீடு புகுந்து உரிமையாளரை கொலை செய்து நகைகள் மற்றும் வீட்டு உறுதி ஆகியவற்றை கொள்ளையடித்த கும்பல்..! உரிமையாளரின் மகன் படுகாயம்...
வீட்டின் உரிமையாளரை அடித்துக் கொலை செய்துவிட்டு வீட்டிருந்த பெருமளவு பொருட்கள், தங்க நகைகள் மற்றும் வீட்டு உறுதி ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் களனி - வராகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு 11.30க்கும் 12 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்குள் நுழைந்த நால்வர் வீட்டில் இருந்தவர்களை வாள்கள் மற்றும் தடிகளால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் வீட்டின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.