நாளை நாடு முழுவதும் “பொது வேலை நிறுத்தப் போராட்டம்”...! முடங்கும், அரச- தனியார் சேவைகள்...
அரசாங்கத்திற்கு எதிராக நாளைய தினம் (28) “பொது வேலைநிறுத்தம்” என்ற தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க மற்றும் அரை அரசாங்க, தோட்ட, தனியார் துறைகள் அனைத்தும் இந்த நாள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். வசந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டு மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் தன்னிச்சையான பயணத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது. எனவே இந்த நாட்டின் உழைக்கும் மக்களாகிய நாங்கள்
எதிர்வரும் 28ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கத்திடம் கூறுகின்றோம். காலிமுகத்திடலில் போராடும் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறார்கள்.
ஆட்சியாளர்களை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள். இந்த நாட்டிலுள்ள அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் இணைந்து 28ஆம் திகதி முழுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.
வேலைநிறுத்தத்தை அடுத்து வரும் 6ம் திதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம் மற்றும் கூட்டு ஹர்த்தாலில் ஈடுபடுவதற்கு
இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.