SuperTopAds

ரம்புக்கணை துப்பாக்கி சூட்டு சம்பவம், அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ஆசிரியர் - Editor I
ரம்புக்கணை துப்பாக்கி சூட்டு சம்பவம், அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

கேகாலை மாவட்டம் - ரம்புக்கணை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கட்டளை வழங்கிய மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கேகாலை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற நிலையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நாரண்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லக்ஷான் என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.