பிச்சைக்காரனுடன் வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்தது..! ஒருவர் பலி, பிச்சைக்காரன் தப்பி ஓட்டம்..
பல்பொருள் விற்பனை நிலையத்திற்கு அருகில் விழுந்து கிடந்தவரை பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை தொியவந்துள்ளது.
குறித்த சம்பவம் பத்தரமுல்லை பகுதியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. உயிரிழந்தவர் மாலபே, பொத்து அராவ வீதியில் வசிக்கும் 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பல்பொருள் அங்காடியில் இருந்து வெளியேறும்போது அருகில் இருந்த பிச்சைக்காரனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிச்சைக்காரன் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.