கௌரவமாக வெளியேறுங்கள்..! பிரதமருக்கு பௌத்த தேரர்கள் அழுத்தம்..
பதவியை விடமாட்டேன் என அடம்பிடிக்காமல் உங்கள் மரியாதையை காப்பாற்றும் விதத்தில் பிரதமர் கௌரவமாக வெளியேறவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியிருக்கின்றார்.
11 கட்சிகளின் கூட்டணிக்கும், சுயாதீன அணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே ரத்ன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டு நலன் கருதி, பதவி விலகும் முடிவை பிரதமர் எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.