பெண் சுற்றுலா பயணிக்கு பின்புறத்தில் தட்டி அசிங்கமாக நடந்துகொண்ட இளைஞர்களுக்கு நடந்த தரமான சம்பவம்..!
இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு யுவதி ஒருவரின் பின்புறத்தில் தட்டியதுடன் அநாகரிகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 3 பேரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டை மற்றும் மெதவெல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அயர்லாந்து யுவதி, மற்றொரு ஜேர்மன் நபருடன் சுற்றலா வந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் கடந்த 6ஆம் திகதி கண்டிக்கு சுற்றுலா சென்ற போது மூன்று இளைஞர்கள் செல்பி எடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அப்போது, இளைஞர் ஒருவர் குறித்த பெண் சுற்றுலாப் பயணியின் பின்புறத்தில் தட்டியுள்ளார்.
குறித்த சம்பவம், அவர்களின் கேமராவில் நேரலையாக பதிவாகியுள்ளதுடன், தனது பின்புறத்தில் தட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பரிடம் கூறும் ஒலிப்பதிவும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞர்களின் முகங்கள் அடங்கிய காணொளியை அண்மையில் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் காரசார விவாதம் நடந்ததையடுத்து
கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுற்றுலாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.