பல முக்கிய வீதிகள் முடக்கப்பட்டது, ஜனாதிபதி செயலகத்தை சூழ இராணுவம், பொலிஸ் குவிப்பினால் பதற்றம்..!

ஆசிரியர் - Editor I
பல முக்கிய வீதிகள் முடக்கப்பட்டது, ஜனாதிபதி செயலகத்தை சூழ இராணுவம், பொலிஸ் குவிப்பினால் பதற்றம்..!

அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கொழும்பு கோட்டைக்கு முன்பாக இருந்து போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில் ஜனாதிபதி செயலகத்தை சூழ அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டு பதற்றமான நிலை காணப்படுகின்றது. 

ஜனாதிபதி செயலகப்பகுதிக்கு செல்லும் சில வீதிகள் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று 16 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்தநிலையில் காலி முகத்திடலுக்கு செல்லும் வீதிகள் மூடப்பட்டுள்ளமையினால் போராட்டத்துக்கு செல்பவர்களும் சாரதிகளும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

இதேவேளை, மருதானை - தொழிநுட்ப சந்தியிலும் அனைத்து பல்கலைக்கழக ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் வீதித் தடைகள் போடப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்னர். 

இதனால் தமது நடமாட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக  குறித்த பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆதங்கள் வெளியிட்டுள்ளனர். இதேவேளை, குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணிபுரிபவர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். 

அந்த வகையில் சுற்றுலாப் பயணிகளும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதை காணக் கூடிய உள்ளது.இதேவேளை, போடப்பட்டுள்ள வீதித் தடைகளில் கம்பிகளால் முட்கள் வடிவமைக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்துள்ளது. 

இதேவேளை, நுவரெலியா - இராகலை நகரில் இன்று (24.04.2022) காலை அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தோட்ட தொழிளாலர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24.04.2022) இளைஞர், யுவதிகள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு