பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம்..! கட்டுப்பாட்டை தளர்த்தும் உத்தரவை மீள பெற்றுள்ள சுகாதார அமைச்சு...

ஆசிரியர் - Editor I
பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம்..! கட்டுப்பாட்டை தளர்த்தும் உத்தரவை மீள பெற்றுள்ள சுகாதார அமைச்சு...

கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கவசம் அணியும் கட்டுப்பாடு அண்மையில் தளர்த்தப்பட்ட நிலையில் அந்த உத்தரவினை சுகாதார அமைச்சு மீள பெற்றுள்ளது.

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய, முன்பு அறிவிக்கப்பட்டதைப்போன்று வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பொது இடங்களில் பொதுமக்களின் அதிக நடமாட்டம் உள்ளமையினை கருத்தில் கொண்டு முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு