நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு..! நாடு முழுவதும் கையிருப்பு முடிந்தது...
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலின்டர் கையிருப்பு முடித்துள்ள நிலையில் எதிர்வரும் 27ம் திகதிவரை சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படாது. என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 12ம் திகதி லிட்ரோ நிறுவனம் இதேபோன்று எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியது.
இந்நிலையில், எதிர்வரும் 25 மற்றும் 26ம் திகதிகளில் 3600 மெற்றக் தொன் எரிவாயு கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து வழமைபோல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் எனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டது.
எனினும், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் தகனசாலைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்காக எரிவாயு விநியோகத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.