SuperTopAds

முகக்கவசம் அணிய தேவையில்லை என்ற தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு பணிப்பு..! சுகாதார அமைச்சர் கருத்து..

ஆசிரியர் - Editor I
முகக்கவசம் அணிய தேவையில்லை என்ற தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு பணிப்பு..! சுகாதார அமைச்சர் கருத்து..

நாட்டில் பொது இடங்களில் முககவசம் அணிய தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்திருந்த நிலையில் அதனை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு சுகாதார அமைச்சர் சன்ன ஐயசுமண கூறியுள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் 15 பேர் கொண்ட நிபுணர் குழுவினால், இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த 19 ஆம் திகதி முதல் இந்தத் தீர்மானம் அமுலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்தத் தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு நிபுணர் குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.