பெற்றோல் பவுசருக்கு பொதுமக்கள் தீ வைப்பதற்கு முயற்சித்தமையினாலேயே துப்பாக்கி சூடு..! பொலிஸ் பேச்சாளர் கூறுகிறார்...
அரசுக்கு எதிராக கேகாலை - ரம்புக்கணை பகுதியில் பொலிஸார் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியமையினை பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.
பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தபோதும், மக்கள் எரிபொருள் தாங்கிக்கு தீ வைக்க முற்பட்டதால்,
பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். இதேவேளை பொலிஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானதுடன், 12 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.