அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியோர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு, கண்ணீர் புகைகுண்டு தாக்குதல்..! 7 பேர் படுகாயம்...
அரசுக்கு எதிராக கேகாலை மாவட்டம் ரம்புக்கணை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் மீது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
ரம்புக்கணை பகுதியில் இன்று காலை தொடக்கம் அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் இன்று மாலை போராட்டகாரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் மூண்டுள்ளது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் குண்டு பிரயோகம், மற்றும் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர். இதனால் சுமார் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.