நாடு முழுவதும் பற்றிக்கொண்டது மக்கள் போராட்டங்கள்..! சுமார் 27 இடங்களில் பதற்றமான சூழல், பல பிரதான வீதிகள், புகைரத பாதைகள் முடக்கம்...
நாட்டில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதும் 27 இடங்களில் மக்கள் வீதிகள், புகையிரத பாதைகள், முக்கிய நகரங்களை முடக்கி போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று காலை நாட்டின் சில பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் சுமார் 27 பிரதேசங்கள் வரை பரவியுள்ளது. இதனால் நாட்டின் முக்கிய வீதிகள் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஆங்காங்கே மக்கள் வாகனங்களை நிறுத்தி வீதி மறியலில் ஈடுபட்டுள்ளதுடன் வீதிகளின் குறுக்கே டயர்களை போட்டு எரிப்பதால் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரம்புக்கன, காலி, இரத்தினபுரி, திகன, மஹியங்கனை, மாத்தறை, மாத்தளை, அனுராதபுரம், அக்குரஸ்ஸ, சிலாபம், kakkapalliya, கடுகஸ்தோட்டை, தெல்தெனிய, பாணந்துறை, அவிசாவளை உக்வத்த,
கேகாலை, ஜிந்தோட்ட, மாதம்பே, மாவனல்ல, தியத்தலாவ, அழுத்கம, ஹப்புத்தளை, பண்டாரவளை, தம்புள்ளை, மஹனுவர, கட்டுநாயக்க, பேருவளை ஆகிய பகுதிகளில் போராட்டம் இடம்பெற்று வருகிறது.