பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றது..! வேறு வழியில்லையாம் போக்குவரத்து அமைச்சர் கை விரிப்பு..
நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பேருந்து கட்டணங்களை உயர்த்தும் நிர்ப்பந்தம் உருவாகிவிட்டதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பல பிரதேசங்களில் பேருந்து உரிமையாளர்கள் இன்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போர்க்களமாக மாறியுள்ளன.
இந்நிலையில் பேருந்து கட்டணங்கள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர் தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.