அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்தியோர் மீது பொலிஸார் அடாவடி..! கூடாரங்களை பிடுங்கியதால் பதற்றம்...
கொழும்பு - காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக காலி நகரில் இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை பொலிஸார் பிடுங்கியதால் அங்கு பதற்றமான நிலைமையேற்பட்டிருக்கின்றது.
இன்று காலை அடாவடியாக நுழைந்த பொலிஸார் தற்காலிக கூடாரங்களை அகற்றியதாக கூறப்படுகின்றது. காலியில் இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.