அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் வன்முறையை பிரயோகிக்க இராணுவம் முயற்சியா? பயிற்சியும் நடக்கிறதா? இராணுவ தளபதி விளக்கம்..
கொழும்பு - காலிமுகத்திடலில் அரசுக்கு எதிரான போராட்டத்தை நடாத்திவருவோர் மீது வன்முறையை பிரயோகிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக பயிற்சிகள் நடப்பதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக இராணுவ தளபதி கூறியிருக்கின்றார்.
சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் நபர்களால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தாம் அதனை நிராகரிப்பதாக இராணுவ தளபதி கூறியிருப்பதுடன் வதந்திகளை மக்கள் நம்பகூடாது எனவம் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
போராட்டகாரர்களுக்கு எதிராக வன்முறையை துண்டி விட இராணுவம் தயாராகி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.
கடவத்தையில் உள்ள இராணுவ கமாண்டோ படைப் பிரிவின் முகாமில் சேவையாற்றும் படையினருக்கு போராட்டகாரர்களை அடக்குவது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் போராட்டகார்கள் எழுப்பும் கோஷங்களை எழுப்பியவாறு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதேவேளை போராட்டகாரர்களை அடக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என சரத் பொன்சேகா நேற்று இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.