ஜனாதிபதி - முன்னாள் அமைச்சர்கள் இடையிலான சந்திப்பில் முக்கிய தீர்மானங்கள்..! ராஜபக்ஸ குடும்பத்தில் பலருக்கு அமைச்சு பதவி கிடையாதாம்...
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ - முன்னாள் அமைச்சர்கள் இடையே நேற்றய தினம் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றிருக்கின்றது.
இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் நாளை மாலையளவில் புதிய அமைச்சரவை பதவியேற்கும்,
நாமல் , பஸில் , சமல் , சஷீந்திர அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டார்கள், ஆட்சியை கொண்டுசெல்ல உதவ
அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காமலிருக்க தயார் என்று முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதுடன்,
‘ஜனாதிபதி பதவிகாலம் முடியும்வரை பதவியில் இருப்பேன்’ .எதிர்க்கட்சியினரை புதிய ஆட்சி அமைக்க அழைத்தேன் அவர்கள் முன்வரவில்லை
அதனால் புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென’ பேசப்பட்டுள்ளது.